உள்ளூர் செய்திகள்

தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

தென்திருப்பேரை பேரூராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

Published On 2023-11-02 09:00 GMT   |   Update On 2023-11-02 09:00 GMT
  • முகாமில் சிறந்த கலப்பின பசு, சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.
  • மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது.

தென்திருப்பேரை:

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு திட்ட முகாம் தென்திருப்பேரை பேரூராட்சி கல்லாம்பாறை கிராமத்தில் பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமையில் துணை தலைவர் அமிர்த வள்ளி, பேரூராட்சி உறுப்பினர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

முகாமில் சிறந்த கலப்பின பசு, கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகளை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் வழங்கினார்.

முகாமில் ஆத்தூர் கால்நடை உதவி மருத்துவர் செந்தில் கண்ணன், தென்திருப்பேரை கால்நடை உதவி மருத்துவர் வினோதினி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், காளைகள் மற்றும் கிடாக்களுக்கு ஆண்மை நீக்கம், கோழி கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை டி.வி.எஸ். சேவைகள் அறக்கட்டளை சார்பில் இசக்கி செய்திருந்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News