உடன்குடியில் கால்நடை சிறப்பு முகாம்
- கூடல்நகர் பகுதியில் குலசேகரன்பட்டினம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- முகாமில் குடற்புழுநீக்கல், சினைப்பரிசோதனை, கருவூட்டல் செய்தல் உள்ளிட்டவைக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
உடன்குடி:
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடன்குடி யூனியன் மாதவன்குறிச்சி ஊராட்சி கூடல்நகர் பகுதியில் குலசேகரன்பட்டினம் கால்நடை மருந்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கால்நடைத்துறை துணைஇயக்குநர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி இயக்குநர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். முகாமை உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் தொடங்கி வைத்தார். முகாமில் சிறந்த கிடாரி கன்றுகளுக்கும், சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கினார். மேலும் தற்காலிக மலட்டு தன்மை நீக்குதல், குடற்புழுநீக்கல், ஆண்மை நீக்கம் செய்தல், சினைப்பரிசோதனை, கருவூட்டல் செய்தல், மனது கால நோய்கள் தடுப்பு உள்ளிட்டவைக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. முகாமில் மாதவன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சேர்மதுரை, துணைத்தலைவர் கருப்பசாமிமற்றும் பலர் கலந்து கொண்டனர்.