உள்ளூர் செய்திகள்

கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

குமாரசாமிபாளையத்தில் கால்நடை சிகிச்சை முகாம்

Published On 2023-02-08 07:29 GMT   |   Update On 2023-02-08 07:29 GMT
  • கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், பெரியசோளிபாளையம் ஊராட்சி குமாரசாமிபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான கால்நடை சிகிச்சை, சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • 700 -க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சைகள் அளித்தனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், பெரியசோளிபாளையம் ஊராட்சி குமாரசாமிபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான கால்நடை சிகிச்சை, சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் கால்நடை மருத்துவர்கள் ரவிச்சந்திரன், பொன்.தனவேல், செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சுரேஷ், துரைசாமி, தடுப்பூசி பணியாளர் சதீஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் 700 -க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும் இதர சிகிச்சைகள் அளித்தனர்.

கிராமத்தை சார்ந்த கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சை பெற்று சென்றனர். இம்முகாமில் கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை அளித்தல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

சினை பருவத்தில் உள்ள பசு மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல்கள் செய்யப்பட்டன. முகாமில் 61 கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.சிறந்த முறையில் கன்றுகள் பராமரிப்போருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும்

சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி கால்நடை வளர்க்கும் சிறந்த கால்நடை விவசாயிகளுக்கு பெரியசோளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி சிறப்பு மேலாண்மை விருதுகளை வழங்கினார். முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை பெரியசாமிபாளையம் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News