மணல் குவாரியை மூடக்கோரி வி.சி.க.வினர் உண்ணாவிரதம்
- தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது.
- சவுடு மண்குவாரிக்கு விளைநிலத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கீழமருதாந்தநல்லூர் ஊராட்சி பொன்வாச நல்லூர் இச்சலடி கிராமத்தில் சவூடுமண் குவாரியை தடுத்து நிறுத்த கோரியும், தோண்டப்பட்ட பள்ளத்தை மூடக்கோரியும், விளைநிலங்களை பாதுகாத்திட கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
விசிக மயிலாடுதுறை ஒன்றிய பொறுப்பாளர் சாமி சீசர் தலைமையில் நடைபெற்றது.
கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்மோகன், பாரதிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது உண்ணாவிரத போராட்டத்தில் பாதுகா க்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு சட்டவிரோதமாக சவூடு மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், சவுடு மண்குவாரிக்கு விளைநிலத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியவர்கள் மீது விசாரணை நடத்தி முறை கேட்டில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்கூட்டியே இதுபோன்ற முறைகேடுகள் தெரிந்துயிருந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது விசாரணை செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தகவல் அறிந்துவந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன், காவல் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி குவாரியை மூடுவதாக உறுதி அளித்தார்.
இருப்பினும் குவாரி மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டக்காரர்கள் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
பின்னர் தோண்டிய பள்ளத்தை மூடிய பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் வினோத், தாமோதரன், அறிவு, மற்றும் கிராமத்தில் உள்ள பெண்கள், ஆண்கள், இளைஞர்கள், என ஏராளமானவர்கள் கலந்துக்கொன்டனர்.