கும்பகோணம் மகா காளியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
- உலக நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது.
- பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் செட்டி மண்டபம் மெயின் ரோட்டில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் ஸ்ரீ மகா பச்சைகாளியம்மன் ஸ்ரீ மகா பவள காளியம்மன் எட்டாம் ஆண்டு திருநடனம் வீதி உலா மற்றும் மாசி பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது அதனை தொடர்ந்து கொடியேற்றம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி 26 ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து பால்குடம் காவடி அலகு காவடி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து இரவு சக்தி கரகம் அக்னி கொப்பரை ஸ்ரீ மகா காளியம்மன் உற்சவமூர்த்தி வீதி உலா காட்சி நடைபெற்றது முக்கிய நிகழ்ச்சியான நேற்று இரவு உலக நன்மைக்காகவும், வாழ்வை வளமாக்கும் வகையிலும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது குத்துவிளக்கு பூஜை கலந்து கொண்ட பெண்களுக்கு கோவில் சார்பில் எண்ணெய், தீப்பெட்டி, திரி, ஊதுபத்தி, சூடம், நைவேத்தியம் ஆகியவை வழங்கப்பட்டன. குத்துவிளக்கு பூஜை உலக நன்மை வேண்டி 100க்கும் மேற்பட்ட பெண்கள் குத்து விளக்கு பூஜை நடத்தி வழிபட்டனர்.
பூஜை சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
வருகிற 3ம் தேதி காளியம்மனுக்கு சீழ்வரிசை எடுத்து வருதல் அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நாதஸ்வர கட்சியுடன் மகா பவளகாளியம்மன் ஆனந்த திருநடனம் வீதி உலா ஆரம்பம் வருகிற ஏழாம் தேதி ஸ்ரீ மகா பச்சைகாளியம்மன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயம் வருதல் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவத்துடன் இவ்வாண்டுக்கான மாசி பௌர்ணமி திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நாட்டாமை கார்த்திகேயன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.