கிராம வேளாண் முன்னேற்றக் குழு கூட்டம்
- கூட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.
- உழவன் செயலியில் உள்ள பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை தாலுக்கா, சித்தமல்லி ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 ஆண்டிற்கான கிராம வேளாண் முன்னேற்றக் குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் 50 பேர் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண்மை துணை அலுவலர் பிரபாகரன் சம்பா சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும் நுண்ணுட்ட சத்துக்கள் பயன்படுத்தும் முறைகள் குறித்தும் உயிர் உரங்கள் பயன்பாடு அதன் செயல்பாடுகள் பற்றியும் எடுத்து கூறினார்.
முதலில் வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மானிய விபரங்கள் இடுபொ ருள்கள் இருப்பு போன்ற தகவல்களை வேளாண்மை உதவி அலுவலர் பாபு விளக்கினார்.
மேலும் மழைக் காலங்களில் நெல் பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல், நோய்கட்டுப்பாடு போன்றவற்றை பற்றியும் பசுமை போர்வை திட்டத்தில் எப்படி பதிவு செய்து கொள்வது மேலும் உழவன் செயலியில் உள்ள பயன்பாடுகள் குறித்தும் இடுபொருள்கள் முன்பதிவு எப்படி செய்வது போன்ற விபரங்களும், வானிலை அறிக்கையை தெரிந்து கொள்வது போன்றவற்றை ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமுருகன் எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியின் முடிவில் ஆத்மா திட்ட உதவி மேலாளர் விஜய் நன்றி கூறினார்.