உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சினை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியபோது எடுத்தபடம்.

திட்டக்குடி அருகே அரசு பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்வழித்தடத்தை நீட்டிக்க எதிர்ப்பு

Published On 2023-08-15 09:29 GMT   |   Update On 2023-08-15 09:29 GMT
  • கிராமத்தில் இருந்து இயக்குவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கள் கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு செல்ல இயலாது.
  • பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு தடம் எண்.1-ல் அரசுப் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சினை சாத்தநத்தம் வரை நீட்டித்து அமைச்சர் சி .வெ.கணேசன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்று காலை சாலையில் திரண்டனர்.. அவ்வழியே வந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். கோடங்குடியில் இருந்து பஸ் இயக்கப்படும் போது, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக இருந்தது.

தற்போது இந்த வழித்தடத்தை நீட்டித்து சாத்தநத்தம் கிராமத்தில் இருந்து இயக்குவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கள் கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு செல்ல இயலாது. அதனால் தங்கள் கிராமத்தில் இருந்து இயக்கிய வழித்தடத்தை நீட்டிப்பு செய்யாமல் இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கூறினர். இதனை அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் போக்குவரத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது தொடர்பாக ஆலோசி த்து நடவடிக்கை எடுக்க ப்படுமென பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News