உள்ளூர் செய்திகள்
- கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, படித்துறை வசதி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்.
- அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே 75 அணக்குடி ஊராட்சியில் உள்ள அய்யடிமங்கலம் கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி , படித்துறை வசதி மற்றும் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து கீழ்வேளூர் தாசில்தார் ரமேஷ்குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.