உள்ளூர் செய்திகள்

சாலைமறியலில் ஈடுபட்ட கிராமமக்கள்.

கிராமமக்கள் சாலைமறியல்

Published On 2022-06-15 09:49 GMT   |   Update On 2022-06-15 09:49 GMT
  • ரெங்கநாதபுரம் பகுதியில் சிலர் பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர் வணிகவளாக கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்.
  • போராட்டகாரர்கள் பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டியுள்ள பகுதியை இடிக்கும் வரை போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இடையிருப்பு வருவாய் கிராமத்தில் மணப்படுகை, நெடுஞ்சேரி, இடையிருப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களின் முக்கிய பாசன வாய்க்கால், பாப்பா வாய்க்கால் ஆகும். இந்த வாய்க்கால் மூலம் மணப்படுகை, நெடுஞ்சேரி, இடையிருப்பு உள்பட பல கிராமங்களில் உள்ள 700 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தற்போது ரெங்கநாதபுரம் பகுதியில் சிலர் பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து தனிநபர் வணிக வளாக கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். பாப்பா வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும், முழுமையாக தூர்வாரி தரக்கோரியும் விவசாயிகள், கிராமமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாபநாசம், சாலியமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், டிஎஸ்பி பூரணி மற்றும் இன்ஸ்பெக்டர் அழகம்மாள், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், இளமாறன் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போராட்டகாரர்கள்பாப்பா வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டியுள்ள பகுதியை இடிக்கும் வரை போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

தகவல் அறிந்த அம்மாபேட்டை திமுக ஒன்றிய செயலாளர் தியாக சுரேஷ் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாசன வாய்க்கா லில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் வருவாய்து றையினர் பாசன வாய்க்காலை சர்வே செய்து ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News