100-நாள் வேலை வழங்க பணம் கேட்கும் அதிகாரி மீது பரபரப்பு புகார்- கிராமமக்கள் கலெக்டரிடம் மனு
- 300 பேரும் தலா 50 ரூபாய் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்காவிட்டால் தகாத வார்த்தைகளால் திட்டி உங்களுக்கு பணி இல்லை என்று அனுப்பிவிடுகிறார்.
- இது சம்பந்தமாக 1077 எண்ணிற்கு புகார் அளித்ததால் எங்களை 100 நாள் வேலை திட்டத்திலிருந்து நீக்கி விட்டனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பெரும்பாலை கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பென்னாகரம் வட்டம், பெரும்பாலையில் நாங்கள் வசித்துவருகிறோம்.இக்கிராமத்தில் உள்ள பெண்கள் நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். நூறு நாள் வேலை திட்ட பணி மேற்பார்வையாளராக பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் இந்த திட்டத்தில் வேலை வேண்டும் என்றால் ஒருவருக்கு தினம் 50 ரூபாய் வழங்க வேண்டும் என்று கூறுகிறார்.
ஒரு நாளைக்கு 300 பேர் வேலை செய்கின்றனர். 300 பேரும் தலா 50 ரூபாய் வழங்க வேண்டும், அவ்வாறு வழங்காவிட்டால் தகாத வார்த்தைகளால் திட்டி உங்களுக்கு பணி இல்லை என்று அனுப்பிவிடுகிறார். இது சம்பந்தமாக 1077 எண்ணிற்கு புகார் அளித்ததால் எங்களை 100 நாள் வேலை திட்டத்திலிருந்து நீக்கி விட்டனர். வேலை இன்றி ஒரு வார காலமாக வீட்டிலிருந்து வருகிறோம். அதனால் எங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.