உள்ளூர் செய்திகள்

பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

Published On 2023-02-07 09:23 GMT   |   Update On 2023-02-07 09:23 GMT
  • குன்னத்தூர் ஊராட்சியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
  • நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

அன்னூர்,

கோவை மாவட்டம்

அன்னூர் வட்டத்திற்கு ட்பட்ட குன்னத்தூர் ஊராட்சியில் 6 குக்கிரா மங்களுடன் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியானது கோவை வழித்தடம் சத்தியமங்கலம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஊராட்சி அலுவலகத்திற்கு எதிராக பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள மரத்தடியில் பயணிகள் நின்று பஸ் ஏறி செல்வார்கள்.

திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் இந்த பஸ்நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் பல ஆண்டுகளாக இவர்கள் மரத்தடியில் நின்றபடியே பஸ் ஏறுகிறார்கள். மழை காலங்களில் நனைந்தபடியே நின்று பஸ் ஏறுவதை காண முடிகிறது. இதனால் இங்கு பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த கோரிக்கையை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  

Tags:    

Similar News