உள்ளூர் செய்திகள்

மணப்பாடு கடற்கரையில் உள்ள கிணற்று தண்ணீரை சமையலுக்கு பயன்படுத்தும் கிராம மக்கள் - சுவை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்

Published On 2023-11-13 08:10 GMT   |   Update On 2023-11-13 08:10 GMT
  • எத்தனை வகை வகையான குடி தண்ணீர் வந்தாலும் இந்த கிணற்று தண்ணீருக்கு தனி சுவை உண்டு என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
  • இதைப் போல எங்கள் ஊர் மீனுக்கும் தனி சுவையும் மனமும் உண்டு.

உடன்குடி:

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மனப்பாடு கிராமம் இங்குள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர், இவர்க ளுக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர்திட்டம், திருச்செந்தூர் எல்லப்பன் நாயக்கன் குளத்து தண்ணீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் மூலம் பொது குடிநீர்குழாய், வீட்டு இணைப்பு ஆகியன பஞ்சாயத்து சார்பில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இருந்தாலும் மணப்பாடு கிராம மக்கள் குடிப்பதற்கு,சமையல் செய்வதற்கும் கிணற்று நீரையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். மணப்பாடு கடற்கரையில் கல்லும் மணலும் சேர்ந்து இயற்கையாக சுமார் 60 அடி உயரத்தில் உருவான மணல் குன்றின் மீது திருச்சிலுவைநாதர் ஆலயம்,ஆலயத்திற்கு பின்புறம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள கடல் பயணம் செய்பவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு அருகில் கடல் ஊடுருவலை தடுக்க உயர் கண்காணிப்பு கோபுர காமிமரா உள்ளது., பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த புனித சவேரியார், கடற்கரை அருகில் குடிதண்ணீருக்காக நாழிக் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தியதாகவும், அதனால் கடற்கரையை சுற்றியுள்ள கிணறுகளில் சுவையான குடிநீர் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இவர்கள் கூறும் போது எத்தனை வகை வகையான குடி தண்ணீர் வந்தாலும் இந்த கிணற்று தண்ணீருக்கு தனி சுவை உண்டு. இதனால் எங்கள் ஊரில் பெரும்பாலான மக்கள் குடிப்பதற்கும், சமையலுக்கும் இந்த தண்ணிரை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். இதைப் போல எங்கள் ஊர் மீனுக்கும் தனி சுவையும் மனமும் உண்டு. எங்கள் ஊர் மீன் விற்பனை செய்யும் போது மணப்பாடு மீன் என்று சொல்லி விற்பனை செய்வார்கள் என்று கூறினர்.

Tags:    

Similar News