விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் உண்டியலை உடைத்து திருட்டுமர்ம நபர்கள் கைவரிசை
- அன்றாட பூஜைக்காக இன்று காலை பூசாரி விஜயன் கோவிலை திறந்து உள்ளே சென்றார்.
- பணம் திருடு போய் இருந்ததை பார்த்த பூசாரி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகர மையத்தில் கீழ்பெரும் பாக்கம் பகுதியில் 475 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் தீமிதி விழா கடந்த பங்குனி மாதம் நடைபெற்றது. இந்நிலையில் கோவிலில் நடைபெறும் அன்றாட பூஜைக்காக இன்று காலை பூசாரி விஜயன் கோவிலை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவில் உள்ளே இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடு போய் இருந்தது. இதை பார்த்த பூசாரி, கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், விழுப்புரம் டவுன் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து திருட்டு நடந்த கோவிலில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி திருடி வருகின்றனர்.