உள்ளூர் செய்திகள் (District)

தூத்துக்குடியில் இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்ட காட்சி.

தூத்துக்குடியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

Published On 2022-08-31 08:50 GMT   |   Update On 2022-08-31 08:50 GMT
  • தூத்துக்குடி சிவன் கோவில் தபசு மண்டபத்தில் உள்ள விஸ்வரூப விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
  • தூத்துக்குடி சங்குமுக கடற்கரையில் சிலைகள் விஜர்சனம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவில் தபசு மண்டபத்தில் உள்ள விஸ்வரூப விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதில் மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துகுமார், துணைத் தலைவர் சிவா, மாவட்டச் செயலாளர்கள் ராகவேந்திரா,சிவலிங்கம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பலவேசம், மாவட்ட அமைப்பாளர் நாராயண ராஜ், ஒன்றிய தலைவர் சிபு,ஒன்றிய பொறுப்பாளர்கள், கிருஷ்ணா, சுடலை செல்வம், ராஜா,இந்து ஆட்டோ முன்னணி மாவட்ட செயலாளர் மாரியப்பன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

அப்போது மாவட்ட செயலாளர் ராகவேந்திரா கூறுகையில்,

தூத்துக்குடியில் முக்கிய இடங்கள் சந்திப்புகளில் வைக்கப்பட்டுள்ள100 விநாயகர் சிலைகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு இந்து முன்னணி சார்பாக நடைபெறும் ஊர்வலத்தில் தபசு மண்டபத்தில் ஆரம்பித்து 1ம் கேட், மட்டகடை,திரேஸ்புரம் வழியாக தூத்துக்குடி சங்குமுக கடற்கரையில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார்.

Tags:    

Similar News