உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
- கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
- அதைத்தொடர்ந்து வெற்றி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், 21 வகையான இலைகள், பூக்கள், பழங்கள் படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜை யுடன் தொடங்கி யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வெற்றி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், 21 வகையான இலைகள், பூக்கள், பழங்கள் படைத்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்.
விழாவில் கோவில் தலைவர் தங்கவேல், செயலார் மாரிச்சாமி, பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.