உள்ளூர் செய்திகள்
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்த செல்லப்பட்ட காட்சி.

உடன்குடி பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

Published On 2022-09-04 08:55 GMT   |   Update On 2022-09-04 08:55 GMT
  • உடன்குடி ஓன்றிய இந்து முன்னணி சார்பில் 43 இடங்களில் விநாயகர் சிலைகள்கடந்த 1-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன
  • சுமார் 38 ஊர்கள் வழியாக சென்று திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது.

உடன்குடி:

உடன்குடி ஓன்றிய இந்து முன்னணி சார்பில்உடன்குடி சந்தையடியூர், பெருமாள்புரம், வைத்திலிங்கபுரம், நடுக்காலன் குடியிருப்பு, சிவல்விளைபுதூர், மெஞ்ஞானபுரம் பரமன்குறிச்சி, உட்பட 43 இடங்களில் விநாயகர் சிலைகள்கடந்த 1-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டன.தினமும் விநாயகர் அகவல் ஓப்புவித்தல், கட்டுரை, ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் தினசரி காலை,மாலை என இரு வேளை சிறப்பு பூஜைகள்நடைபெற்றது.

நேற்று மாலை 5 மணி அளவில்ஒவ்வொரு விநாயகர்சிலையும் ஒவ்வொருவாகனத்தில் ஏற்றி, உடன்குடி தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளிமுன்பிருந்து புறப்பட்ட ஊர்வலத்தினை உடன்குடி நகர பா.ஜ.க. தலைவர் பாலன் தொடங்கி வைத்தார்.சேவாபாரதி மாவட்ட தலைவர் கிருஷ்ணமந்திரம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. பொதுச்செயலர் சிவமுருகன் ஆதித்தன், உடன்குடி ஓன்றிய தலைவர் அழகேசன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் சுடலைமுத்து, ஓன்றிய தலைவர் செந்தில்செல்வம், நகர தலைவர் சித்திரைபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஊர்வலம் உடன்குடிபஜார், சந்தையடியூர், கொட்டங்காடு, பண்டாரஞ்செட்டி விளை, ரங்கநாதபுரம், சிவலூர், கொட்டங்காடு கிறிஸ்தியாநகரம், சத்தியமூர்த்தி பஜார், சிதம்பரத்தெரு, காலன் குடியிருப்பு, பேருந்துநிலையம், வில்லிகுடியிருப்பு, வடக்கு பஜார் தைக்காவூர், நயினார் பத்து, சீர்காட்சி, அம்மன்புரம் உட்பட சுமார் 38 ஊர்கள் வழியாக சென்று திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News