பால்பண்ணை உரிமையாளரிடம் ரூ.10½ லட்சம் மோசடி
- பால்பண்ணை உரிமையாளரிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்துள்ளனர்.
- ரூ.10½ லட்சம் மோசடி செய்ததாக நிசார் சுக்கன், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்்த்தி (வயது45). இவர் அதே பகுதியில் பால்பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விருவீட்டை சேர்ந்த நிசார்சுக்கன், தனது கம்பெனிக்கு ஒப்பந்த அடிப்படையில் பாைல கொள்முதல் செய்து வந்தார்.
அதன்படி நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் பாலை சுந்தரமூர்த்தி சப்ளை செய்தார். கடந்த 6 மாதத்தில் பாலை சப்ளை செய்ததில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் பெற வேண்டியுள்ளது. ஆனால் பணத்தை தராமல் நிசார்சுக்கன், அவரது கம்பெனி மேலாளர் சுப்பிரணமணியன் ஆகியோர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுந்தரமூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த கோர்ட்டு நடவடிக்கை எடுக்குமாறு ேபாலீசாருக்கு உத்தரவிட்டது.
அதன்அடிப்படையில் கிருஷ்ணன்கோவில் போலீசார் ரூ.10½ லட்சம் மோசடி செய்ததாக நிசார் சுக்கன், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.