உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி பயணத்தை கலெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

'நான் முதல்வன்' திட்டத்தில் 1055 அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயணம்

Published On 2023-08-17 06:29 GMT   |   Update On 2023-08-17 06:29 GMT
  • ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 1055 அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயணத்தை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
  • உயர்கல்வி படிப்புகள், எதிர்கால வேலைவாய்ப்பு கள் வாய்ப்புகள் குறித்து, அறிந்து பயன்பெற வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 11 ஒன்றியங்களை சேர்ந்த 1055 அரசு பள்ளி மாணவர் களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் வகையிலும், உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அருகிலுள்ள கல்லூரி களுக்கு அழைத்துச் செல் லும் பயணத்தை கலெக் டர் ஜெயசீலன் தொடங்கி வைத் தார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக "நான் முதல்வன்" திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அதில் ஒரு பகுதியாக மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு சிறந்த கல்லூரியை தேர்வு செய்து கல்வி பயின்று வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வேண்டு மென்ற நோக்கில், வழி காட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் முன் னோடி திட்டம் மற்றும் தமிழக முதல் அமைச்சர் கனவு திட்டமான நான் முதல்வன் நிகழ்வை வெற்றி கரமாக கொண்டு செல்லும் பொருட்டு, மாவட்ட நிர் வாகம் சார்பில் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு பயிலும் 1500 மாணவ- மாணவிகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தலை சிறந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயன்பெற்றனர்.

இந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயிலும், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை விருதுநகர் மாவட்டம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள தலைசிறந்த பொறியி யல், கலை மற்றும் அறிவியல், விவசாயக் கல்லூரி, மருத்து வக் கல்லூரி ஆகிய கல்லூரி களுக்கு பார்வையிட இன்று முதல் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் நேற்று முதல் 23-ந்தேதி வரை அழைத்து செல்லப்படு கின்றனர்.

இந்த மாணவர்கள் விருதுநகர் சேது பொறியியல் கல்லூரி, மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரி, காமராஜர் பல் கலைக் கழகம், அமெரிக்கன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பி.கே.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவசாயக்கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளன.

அதன் தொடக்கமாக அருப்புக்கோட்டை, காரியாபாட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர், விருது நகர், சிவகாசி, வெம்பக் கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய 11 ஒன்றியங்களை சேர்ந்த 1055 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 15 பஸ்களில் உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர்.

இம்மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள உயர் கல்வியில் உள்ள வாய்ப்பு கள், அதன் மூலம் கிடைக்கப்பெறும் வேலை வாய்ப்புக்கள், உயர் கல்வி யில் உள்ள துறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட வைகள் குறித்து நேரடியாக சென்று அவர்கள் அறிந்து, தெரிந்து கொள்ளும் வகை யிலும், உயர்கல்வி பயில் வதற்கு ஆர்வத்தை ஏற்படுத் தும் வகையிலும், அவர் களுக்கு சரியான வழி காட்டுதல் வழங்கும் வகை யிலும், கல்லூரி நிர்வாகத் தால் விரிவாக எடுத்துரைக் கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

எனவே மாணவர்கள் இந்த உயர்கல்வி ஆர்வத்தை தூண்டும் பயணம் மூலம் பல்வேறு துறைகளில் உள்ள உயர்கல்வி படிப்புகள், எதிர்கால வேலைவாய்ப்பு கள் வாய்ப்புகள் குறித்து, அறிந்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

Similar News