உள்ளூர் செய்திகள்

22 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது

Published On 2023-11-23 08:28 GMT   |   Update On 2023-11-23 08:28 GMT
  • திருச்சுழி பஜாரில் 22 கிலோ புகையிலை பொருட்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தனிப்படை போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சட்ட விரோத புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்து வருவதாக திருச்சுழி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த நிலையில் திருச்சுழி பஜாரில் அதிகளவில் புகை யிலை பொருட்கள் விற்பனை செய்யப்படு வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையிலான தனிப் படை போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

அப்போது சந்தேகப்படும் படியாக சாக்குப்பையுடன் 2 பேர் சுற்றிக்கொண்டி ருந்தனர். போலீசார் அவர்களை நெருங்கிய போது தப்பி ஓட முயன்றனர். சுதாரித்துக் கொண்ட போலீ சார் அவர்களை வளைத்து பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தபோது ஏராளமான புகையிலை பொருட்கள் இருந்தன.

விசாரணையில் அவர்கள் திருச்சுழி முத்து ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (52), கேத்தநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (38) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 22 கிலோ அளவுக்கு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வந்த போதிலும் அவற்றின் விற்பனை ஜோராக நடந்து கொண்டு தான் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் கண் காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தனிப்படை போலீசார் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News