கண்மாய் மடை நீர் செல்ல சாலையில் பாலம் அமைக்க வேண்டும்
- கண்மாய் மடை நீர் செல்ல சாலையில் பாலம் அமைக்க வேண்டும்.
- விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் குறுவட்டத்தை சேர்ந்த குருக்கள்குளம், வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், தெய்வேந்திரி, தைலாகுளம், சிங்கம்மாள்புரம் அத்திகுளம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், நிலப்பதிவு, நில நிர்வாகம், வருவாய்த் துறை தொடர்பான 115 கோரிக்கை மனுக்களை, கலெக்டரிடம் வழங்கினர்.
தெய்வேந்திரி, சோளங்குளம், நொச்சிகுளம் கண்மாய் நீரை பயன்படுத்து வோர் சங்க தலைவர் தேவப்பிரியம் அளித்த மனுவில், 'மதுரை- கொல்லம் 4 வழி சாலை பணிக்காக தெய்வேந்திரி குளத்தின் பாசன நிலங்களை அரசு கைய கப்படுத்தி உள்ளது.
இந்த சாலையின் குறுக்கே செல்லும் தெய்வேந்திரி கண்மாய் நடுமடை, வடக்கு மற்றும் தெற்கு மடை ஆகிய 3 மடைகளின் கால்வாய் களில் சிறு குழாய்கள் அமைக்க திட்டமிடப்பட் டுள்ளது. ஆனால் இந்த மடைகள் மூலம் சுமார் 100 ஏக்கருக்கு மேல் தண்ணீர் செல்ல வேண்டியுள்ளது. அதனால் குழாய்கள் அமைத்தால் நீரின் அளவு குறைந்து பாசனம் தடைபட வாய்ப்புள்ளது.
3 கால்வாய்களிலும் உள்ள சிறிய வாய்க்கால்களை அடைத்து விடாமல் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தென்னை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளைர் முத்தையா அளித்த மனுவில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள செண்பகதோப்பு பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் குலதெய்வ கோவில்களுக்கு செல்பவர்களிடம் வனத்துறை ஒரு நபருக்கு ரூ.20 வீதம் கட்டணம் வசூல் செய்கின்றனர்.
விவசாயிகள் மற்றும் பக்தர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.