உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் நகராட்சி வளர்ச்சி பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தினார். அருகில் கலெக்டர் மேகநாதரெட்டி, தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் பவித்ரா ஷியாம் உள்ளனர்.

திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை

Published On 2022-11-02 08:16 GMT   |   Update On 2022-11-02 09:46 GMT
  • திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
  • கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை த்திட்டம், ெரயில்வே மேம்பாலம், புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோடு வரையிலான இணைப்பு சாலை திட்டம் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கையில் வரைபடத்துடன் கலந்தா லோசித்து ஆய்வு செய்த அமைச்சர், ராஜபாளையம் நகரின் வளர்ச்சி திட்டப்ப ணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்வகுத்துக் கொடுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதற்கு பதில் அளித்த அதிகாரிகளும் மார்ச் மாதத்திற்குள் பணி களை முடித்துவிடலாம் என உறுதி அளித்தனர்.

இணைப்பு சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நேருசிலை முதல் சொக்கர்கோவில் வரை செல்லும் தென்காசி ரோட்டில் பேட்ச் ஓர்க் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய தார்ச்சாலை அமைக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார். இதில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா, யூனியன் சேர்மன் சிங்கராஜ், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, நகரசபை துணை தலைவர் கல்பனாகுழந்தைவேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News