தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்
- கொரானாவால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு விசாவுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் நாடு திரும்பிய தமிழர்கள் இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்ப தாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும், அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் திட்டங்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.
திட்ட தொகையில் பொதுப் பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கடவுசீட்டு, விசா நகல், கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் திட்ட விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் ஈடு செய்யப்படும். திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின் 6 மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையை வங்கியில் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையை திரும்ப செலுத்த வேண்டும்.
கொரோனா பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்த, இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விருதுநகர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.