கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவேற்ற முகாம்
- ராஜபாளையம் தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவேற்ற முகாம் நடந்தது.
- இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
ராஜபாளையம்
முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டமென பொதுமக்களின் வரவேற்பு பெற்றுவரும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளின் விண்ணப்ப படிவங்கள் இணைய தளத்தில் சரியாக பதி வேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கிராமம் கிராமாக சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
முகவூர் ஊராட்சி காமராஜ் திருமண மண்டபத்தி லும், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சுந்தரராஜபுரம் ஊராட்சி சமுதாயக்கூடத்திலும் நடைபெற்றுவரும் முகாம்க ளுக்கு அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சரின் இந்த திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இத்திட்டம் மூலம் கோடிக் கணக்கான பெண்கள் பயன் பெற உள்ளதாக கூறினார்.
அப்போது அங்கு வந்த அழகம்மாள் என்பவர் முதல்-அமைச்சரின் திட்டத்தை குலவையிட்டு வாழ்த்தினார்.
ஆய்வின்போது ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன் வட்டார வழங்கல் அலுவலர் தன்ராஜ், காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, கிளை செயலாளர்கள் தொந்தியப்பன், கனகராஜ், மாடசாமி ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.