- ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்னமருதுபாண்டியன் செய்திருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறைக்கு வத்திராயிருப்பு அலையன்ஸ் சங்கங்கள் சார்பில் 650 புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தலைமை வகித்தார். அலையன்ஸ் சங்க மாவட்ட துணை ஆளுநர் சுப்புராஜ் முன்னிலை வகித்தார்.
விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு வட்டார அலையன்ஸ் சங்கங்களின் சார்பில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டது. சிறைத்துறை டி.ஐ.ஜி.யிடம் மாவட்ட நீதிபதி புத்தகங்களை வழங்கினார்.
பின்னர் சிறையில் வருகைப்பதிவு, உணவு மற்றும் விசாரணை சிறை கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்த கிறிஸ்டோபர் தேவையானவர்களுக்கு சட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டார். இந்த விழாவில் தலைமை குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) செல்வன் ஜேசுராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன், சிறைத்துறை கண்காணிப்பாளர் வசந்த கண்ணன், அரசு வழக்கறிஞர்கள் அன்னக்கொடி, ஜான்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நித்தியானந்தன், எழுத்தாளர் தமிழ்பித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்ன மருதுபாண்டியன் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சின்னமருதுபாண்டியன் செய்திருந்தார்.