உள்ளூர் செய்திகள்

ஆண்டுவிழாவை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அருகில் சிறப்பு விருந்தினர் உளவியலாளர் ரகுநாத் மற்றும் பலர் உள்ளனர்.

பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

Published On 2022-11-15 07:51 GMT   |   Update On 2022-11-15 07:51 GMT
  • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் 24-ம் ஆண்டு விழா நடந்தது.
  • இந்த விழாவில் 2 ஆயிரத்தும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

சிவகாசி

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் 24-ம் ஆண்டிற்கான முதலா மாண்டு மாணவர்கள் தொடக்க விழா மற்றும் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் தொடக்க விழா கல்லூரி கலையரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்விக்குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் தொடக்கவுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி வர வேற்றார். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் ஸ்ரீராம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சென்னை உளவியலாளர் ரகுநாத் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

இன்றைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கும், மொபைல் போன்களுக்கும் அடிமையாகி நேரத்தையும், ஆரோக்கியத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி எளிதில் உணர்ச்சிவசப்பட்டு படிப்பில் முழுமையான கவனம் செலுத்த முடியாமல் மனமுடைந்து தவறான முடிவை எடுக்கின்றனர்.

பெற்றோர்கள் மாண வர்களை அரவணைத்து அறிவுரை வழங்கி அவர்களுக்கு அன்பான முறையில் அறிவுரையை கூற வேண்டும். இன்றைய இளம் தலைமுறையினரின் உணவு பழக்க வழக்கங்கள் முறையாக இருக்க வேண்டும்.

மேலும் பெண் குழந்தைகள் இந்த சமூகத்தில் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும், வாழ சமுதாயத்தில் உயர் இடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலாமாண்டு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இரு கல்லூ ரிகளின் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்த னர். பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் சயின்ஸ் அண்டு ஹிமானிட்டிஸ் துறைத்தலைவர் பேரா சிரியர் சக்திஸ்ரீ நன்றி கூறினார். 

Tags:    

Similar News