உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக அனுமதி கடிதத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

வீடுகள் கட்ட அனுமதி கடிதம்

Published On 2022-08-07 08:48 GMT   |   Update On 2022-08-07 08:48 GMT
  • பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி கடிதத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
  • பசுமை வீடு திட்டம் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது என்றார்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் (2021-22) கீழ் 68 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகள் கட்டும் அனுமதி கடிதம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், எழை-எளிய மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு மற்றும் குடிசை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டது தான் குடிசை மாற்று வாரியம். இந்த வாரியத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்துள்ளனர், அவர் வழியில் ''முதல்வரின் அனைவருக்கும் வீடுகள் திட்டம்'' மற்றும் பசுமை வீடு திட்டம் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுகிறது என்றார்.

அதனைத்தொடர்ந்து சேத்தூர் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மூலதன மானிய நிதித்திட்டம் (2021-22) மூலம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வாழவந்தான் கண்மாயில் திறந்தவெளி கிணறு மற்றும் பிரதான குழாய் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜையை எம்.எல்.ஏ. நடத்தி வைத்தார்.

இதில் சேர்மன் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் வெங்கடபாபு, பேரூர் தி.மு.க. செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, ஒன்றிய துணை செயலாளர் குமார், இளைஞரணி சீனிவாசன், செல்வக்குமார், பட்டுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News