காளீஸ்வரி கல்லூரியில் வளாகத் தேர்வு
- காளீஸ்வரி கல்லூரியில் வளாகத் தேர்வு நடந்தது.
- பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார்.
சிவகாசி
சிவகாசி, காளீஸ்வரி கல்லூரிப் பணி அமர்வு மையத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வளாகத் தேர்வு நடந்தது.
பணிஅமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், உலக அளவில் எண்ணற்ற வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. நமக்கான வாய்ப்புகள் உருவாகும்போது அதைத் தவறவிடாமல் நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வேண்டும் என்றார்.
துணை முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சென்னையைச் சேர்ந்த தனியார் உணவு நிறுவனம் நடத்திய வளாகத் தேர்வில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த 80 மாணவர்கள் பங்கேற்றனர். நிறுவன மேலாளர் பொன்மொழியன், நிறுவனத்தின் நோக்கம்- அறிமுகம், பணியின் தன்மை குறித்து எடுத்துரைத்தார்.
பின் நிறுவனத்திற்குத் தேவையான பணியாளர்களைஎழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்தார். பணி அமர்வு மையப் பொறுப்பாளர் லட்சுமணக்குமார் இதற்கான ஏற்பாடை செய்திருந்தார். மேலும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த பணி அமர்வு மைய ஒருங்கிணைப்பாளர்களின் ஒத்துைைழப்புடன் வளாகத் தேர்வு நடந்தது. மாரீஸ்வரன் நன்றி கூறினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் ஆகிய துறைகளின் ஆராய்ச்சி மன்றம் சார்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில் கணினி அறிவியல் துறையின் துறைத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான பிரியா தனது ஆய்வு கட்டுரையான "மல்டி கோரை பயன்படுத்தி திறமையான இணையான நீள்வட்ட வளைவு குறியாக்கவியல்" பற்றிய தகவல்களை கூறினார்.
அவர், பல மைய அமைப்பு,நீள்வட்ட வளைவு குறியாக்கவியல், இணையான மற்றும் திறமையான அல்காரிதத்தை அபைன் பாயிண்ட் உருவாக்கத்திற்காக நீள்வட்ட வளைவு குறியாக்கவியல் பயன்பாடு ஆகிய தலைப்புகளில் பேசினார்.
இதில் கணினி அறிவியல், கணினிப் பயன்பாட்டியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறைகளைச் சேர்ந்த அனைத்து உதவிப் பேராசிரியர்களும் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ரேவதீஸ்வரி வரவேற்றார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் சவும்யா நன்றி கூறினார்.