உள்ளூர் செய்திகள்

வளர்ச்சிப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2023-03-10 07:56 GMT   |   Update On 2023-03-10 07:56 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
  • ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஊராட்சி மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி விழுப்பனூர் ஊராட்சி கிருஷ்ணன் கோவில் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.32 லட்சம் மதிப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும், பிள்ளை யார்நத்தம் ஊராட்சி அண்ணாநகர் கிராமத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு தொடர்பான பணியையும் ஆய்வு செய்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர் வேளா ண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திருப்பாற்கடல் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2020-21-ன் கீழ், ரூ.107 லட்சம் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாரி உட்புறம் கான்கிரீட் அமைத்து குளத்தை சுற்றிலும் நடை பாதை மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளதையும், மடவார் வளாகத்தில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தில் நகராட்சியில் வார்டு வாரியாக சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான எந்திரத்தில் அரவை செய்யப்பட்டு, தொட்டியில் காய வைத்து உரமாக மாற்றப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

படிகாசுவைத்தான்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில், விவசாயிகள் பயிற்சி மைய வளாகத்தில் 5 ஆயிரம் முசுக்கொட்டை மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதையும் கலெக்டர் ஜெய்சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் ராஜபாளையம், முத்துசாமிபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் அரசின் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார். ராஜபாளையம் அரசு மகப்பேறு அரசு ஆஸ்பத்திரியிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகர்நல அலுவலர் கவிபிரியா, நகராட்சி மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, ராஜபாளையம் அரசு தலைமை மருத்துவர் மாரியப்பன், சந்திரா, நகராட்சி செயற்பொ றியாளர் தங்கபாண்டியன், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News