இல்லம் தேடி கல்வி திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
- சாத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இல்லம் தேடி கல்வி திட்டம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தனர்.
- இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர், செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி, தலைமையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளி நலத்துறை செயலருமான ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் துலுக்கப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.11.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளையும், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்து, கற்பிக்கும் முறைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர், ரெங்கப்பநாய க்கன்பட்டியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.5.49 லட்சம் மதிப்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளையும், படந்தாலில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.