கடைகளில் காலாவதியான எலக்ட்ரானிக் தராசுகள் பறிமுதல்
- கடைகளில் காலாவதியான எலக்ட்ரானிக் தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் இறைச்சி கடைகளில் பொதுமக்களுக்கு கிலோ கணக்கில் வழங்கப்படும் மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிகளின் எடை அளவுகள் குறைவாக இருப்பதாக பொதுமக்களி டம் இருந்து மாவட்ட தொழிலாளர் துறைக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மாவட்ட தொழிலாளர் துறையின் அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் மைவிழி செல்வி உத்தரவின்பேரில் இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.
திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் வீரசோழன் பகுதிகளில் உள்ள மீன், கோழி, மட்டன் கடைகளில் தொழிலாளர் துறை ஆய்வாளர் சதாசிவம், உதவி ஆய்வாளர் உமா மகேஸ்வரன் தலைமையி லான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
தராசுகளில் சரியான அளவு காட்டுகிறதா? என சோதனையிட்ட அதிகாரி கள் தாங்கள் கொண்டு வந்த எடைக்கற்கள் தராசு களில் வைத்து அளவுகளை சரிபார்த்து ஆய்வுகள் மேற்கொண்டனர். கடைக்கு இறைச்சி வாங்க வந்த பொதுமக்களிடம் கடைகளில் வழங்கப்படும் இறைச்சியின் எடை சரியான அளவில் இருக்கி றதா? என்றும் விசாரித்தனர்.10-க்கும் மேற்பட்ட கடைகளில் நடந்த சோதனையின்போது சில இறைச்சி கடைகளில் தராசுகள் காலாவதியான பின்பும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. காலாவதி யான எலக்ட்ரானிக் தராசு, எடை மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.