இருதரப்பினரிடையே மோதல்; பதட்டம்-போலீஸ் குவிப்பு
- அருப்புக்கோட்டை அருகே இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
- பெண்கள் உள்பட 94 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொட ர்பாக இருதரப்பி னரிடையே பிரச்சினை நீடித்து வருகிறது.
இது தொடர்பாக அவர்களுக்கு அடிக்கடி மோதல் ஏற்படுவதால் கிராமத்தில் அமைதியின்மை நிலவுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று தெற்கு தெருவை சேர்ந்த ஜெயராமன், தனது மனைவியுடன் கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். கோவில் அருகே வந்தபோது அங்கு நின்றிருந்த ஒரு தரப்பினர் ஜெயராமனை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.
இதனை அவர் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் இருதரப்பை சேர்ந்தவர்கள் அங்கு வந்த மோதலில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பாண்டி(வயது36), மருதன்(59), ஆதிலட்சுமி(54) உள்பட 8 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஜெயராமன் கொடுத்த புகாரின்பேரில் எதிர் தரப்பை சேர்ந்த கதிரேசன், கருப்பசாமி, மனோஜ் உள்பட 14 பேர் மீது அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மற்றொரு தரப்பை சேர்ந்த கருப்பசாமி கொடுத்த புகாரின்பேரில் ராமலட்சுமி, முருகன், அபிஷேக், மருதன், வேல்முருகன், ராஜ்குமார் உள்பட 80 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருதரப்பினர் மோதலால் ஆத்திப்பட்டியில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.