ரெயில்வே மேம்பாலத்துக்கு 2-ம் கட்டமாக நிலம் கையகப்படுத்த ஆலோசனை கூட்டம்
- ராஜபாளையத்தில் ரெயில்வே மேம்பாலத்துக்கு 2-ம் கட்டமாக நிலம் கையகப்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
- இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டா ட்சியர் அலுவ லகத்தில் ராஜபாளையம்-சத்தி ரப்பட்டி ரோட்டில் நடைபெற்று வரும் ெரயில்வே மேம்பால பணிக்கான 2-ம் கட்ட நில எடுப்புக்கான இறுதி தீர்வுரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜானகி தலைமையில் நடந்தது. தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 19 நில உரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரி வித்தனர். மேலும் ஓரிரு நில உரிமையாளர்கள் தங்களது வீடு பாதிக்காதவாறு நிலத்தை கையகப்படுத்துமாறு கூறினார்கள். அதற்கு பதில் அளித்த தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நில உரிமையாளர்களுக்கு பாதிப்புகள் இல்லாதவாறு நிலம் கையகப்படுத்தப்படும்.
மேலும் இந்த மாதத்திற்குள் நில உரிமையாளர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு விரைவில் நிலம் கையகப்படுத்தி மேம்பாலம் அமைக்கும் பணி முடிக்கப்படும் என்றார்.அதனை தொடர்ந்து 2-ம் கட்ட நில எடுப்பில் என்.ஆர்.கே. பங்க் அருகில் உள்ள நில உரிமையாளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களிடம் பேசி பொதுமக்களின் சிரமங்களை எடுத்துரைத்து மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நிலம் எடுக்க நில உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று கொடுத்தார்.
மேலும் உடனடியாக நிலத்தை கையகப்படுத்தி பணியை துரிதப்படுத்துமாறு ஒப்பந்ததாரரிடம் கூறிய எம்.எல்.ஏ., வரும் ஏப்ரல் மாதத்தில் மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தாசில்தார் ராமச்சந்திரன், தனி தாசில்தார் மாரீஸ்வரன் நெடுஞ்சாலை துறை அலுவலர் ஜெகன் செல்வராஜ், தி.மு.க நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.