கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா
- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1652 மாணவா்களுக்கு பட்டங்களை மத்திய மந்திரியின் அறிவியல் ஆலோசகர் வழங்கினார்.
- பெற்றோர்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலச லிங்கம் பல்கலைக் கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா வேந்தா் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இணைவேந்தா் டாக்டா். அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினா்கள் டாக்டா்.ஜி.சுவாமிநாதன், ஆலோ சகா் எஸ். ஞானசேகா், துணைவேந்தா். எஸ்.நாராயணன், பதிவாளா் வே.வாசுகதேவன் முன்னிலை வகித்தனா்.
மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகா் ஜி.சதீஷ்ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு ரேங்க் எடுத்த மாணவா்களுக்கு பதக்கங்களையும், பொறியியல், வேளாண்மை, கட்டடவியல், கலை மற்றும் அறிவியல் இளங்கலை, முதுகலை மாணவா்கள், வாய்பேசாத, காதுகேளாத மாணவா்கள் 13 போ், பி.எச்.டி. 84 உள்பட மொத்தம் 1652 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, கனடா ஸ்பாஸியல் டி.என்.ஏ. இன்பர்மடிக்ஸ் நிறுவன துணைத்தலைவா் சுதா்சன் கோபாலன், பெங்களுா் ஜென்பேக்ட் நிறுவன உதவி துணைத் தலைவா் கருணாகரன் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ்ரெட்டி பேசுகையில், கலசலிங்கம் பல்கலை கடந்த 38 வருடங்களாக, இளைஞா்களுக்கு தொழி ற்சாலை பயிற்சியுடன் இணைந்த கல்வியை வழங்கி மக்களுக்கும் நாட்டுக்கும் அா்த்தமான பங்களிப்பை செய்து வருகிறது.
மேலும் வாய்பேசாத, காது கேளாத மாணவா்களுக்கு பி.டெக்., பி.காம்., படிப்பை ஆசியாவிலேயே முதன்முதலாக தொடங்கி 2007 முதல் நடத்தி வருவது கண்டு பாராட்டுகின்றேன்.
பட்டமளிப்பு விழா என்பது ''கனவையும் உண்மை நிகழ்வையும் இணைக்கும் பாலம் ஆகும்". இந்த நேரத்தில் மாணவா்கள் கனவை நனவாக்க உறுதுணை செய்த இறைவ னையும் பெற்றோர்களையும், ஆசிரியா்களையும் நன்றி செலுத்த வேண்டும்.
''உலகமே ஒரு குடும்பம்" இதில் இந்தியா தனித்தி றமையில் நம்பிக்கையுடன் உலக நாடுகளுலெல்லாம் ஒருங்கிணைத்து, அமைதியை நிலைநாட்டி வருகிறது. இதனை பிரதமர் மோடி இளைஞா்களை, தங்கள் 25 வருட வாழ்வை நாட்டின் வளா்ச்சிக்கு முழுமனதுடன் உழைத்து, உலகலாவிய நல்லிணக்கத்தை உருவாக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டம் பெற்ற மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இயக்குநா்கள், டீன்கள், துறைத்தலை வா்கள், பேரா சிரியா்கள், பெற்றோர்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.