உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியபோது எடுத்த படம். 

கருப்பு-சிவப்பு இருந்தால்தான் நாடு சுபிட்சமாக இருக்கும்

Published On 2022-06-13 08:40 GMT   |   Update On 2022-06-13 08:40 GMT
  • கருப்பு-சிவப்பு இருந்தால்தான் நாடு சுபிட்சமாக இருக்கும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
  • நாம் சுயமரியாதையோடு இருக்கிறோம் என்றால் அதற்கு திராவிடம்தான் காரணம் என்றார்.

அருப்புக்கோட்டை

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் அருப்புக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசும்போது, சாதிப்பாகுபாடு இல்லாமல் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என அனைவரையும் சமமாக வாழ வழிகாட்டியவர் தான் தந்தை பெரியார். கருப்பு, சிவப்பு இருந்தால்தான் தமிழ்நாடு சுபிட்சமாக இருக்கும். நாம் சுயமரியாதையோடு இருக்கிறோம் என்றால் அதற்கு திராவிடம்தான் காரணம் என்றார்.

கூட்டத்தில் பொரு ளாதார நிபுணரும், மாநில திட்டக்குழு துணைத்தலைவருமான ஜெயரஞ்சன், திராவிட இயக்க செயற்பாட்டாளரும், திரைப்பட எழுத்தாளருமான டான் அசோக் , திராவிட இயக்க வரலாற்றையும் அரசின் சாதனைகளையும் எடுத்துக்கூறி சிறப்புரை யாற்றினர்.

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாபு வரவேற்று பேசினார். மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தாயகம் கவி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை அமைப்பாளர் பாலச்சந்தர், சூரியநாராயணன், ரவி கண்ணன், ஆனந்த், நகர இளைஞரணி அமைப்பாளர் இளங்கோ, தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமானுஜம், வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தங்கமணி ஆகியோர் நன்றி கூறினர். கூட்டத்தில் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News