போலீஸ் சூப்பிரண்டு மீது அவதூறு வழக்கு தாக்கல்
- விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சிக்கு கடந்த 2008-09-ம் ஆண்டு குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நிதியை அரசு ஒதுக்கியது. இதனை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல் விதிமுறைகளை மீறி நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக விருது நகரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றத்திடம் புகார் அளித்தார். இதனை விசாரித்த உள்ளாட்சி அமைப்பு மன்றம் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரி களுக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் விருதுநகர் நகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் 8பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப் பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
இது தொடர்பாக பாண்டுரங்கன் மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு போலீஸ் சூப்பி ரண்டு 8வாரங்களுக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அப்போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நடவ டிக்கை எடுக்காத விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மீது மதுரை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு கடந்த 13-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.