மல்லாங்கிணர்-அருப்புக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள்
- மல்லாங்கிணர்-அருப்புக்கோட்டை பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
- அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பேரூராட்சி மற்றும் அருப்புக்கோட்டை வட்டாரப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மல்லாங்கிணர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.82.30 லட்சம் மதிப்பில் சின்னக் குளம் ஊரணி மேம்பாட்டு பணிகளையும், கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.148 லட்சம் மதிப்பில் திம்மன் பட்டி சாலை பொது மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளையும், வளமீட்பு பூங்காவில் 15-வது நிதிக்குழு மான்யத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் உரம் தயாரிக்கும் உலர்களம் அமைக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வளமீட்பு பூங்கா வில் தூய்மை இந்தியா இயக்கம் மூலம் ரூ.23.30 லட்சம் மதிப்பில் உரம் தயாரிக்கும் உலர்களம் அமைக்கும் பணிகளையும், முடியனூர் காலனியில் ரூ.9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கழிப்பறை பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் பின்னர், மல்லாங் கிணரில் உள்ள சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து சீட்ஸ் நிறுவ னத்தினுடைய கொள்முதல் கிட்டங்கி விவசாயி களுடைய விளைபொருட்களை தரம் பிரித்தல், மதிப்பு கூட்டல், விற்பனை செய்தல் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
அருப்புக்கோட்டை வட்டம் கோபாலபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்பட்டு வரும் அரவை முகவை விஸ்வேஸ்வரா அரிசி அரவை ஆலையினை பார்வையிட்டு ஆய்வு செய்து உற்பத்தி முறைகள், தரம் குறித்து கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து கோபாலபுரம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து மருத்துவ முறைகள், மருந்து இருப்பு, நோயாளிகள் குறித் தும் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் விஜயகுமார், மல்லாங்கிணர் பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழ கன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.