இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை
- இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.86 லட்சம், 225 கிராம் தங்கம் கிடைத்தது.
- இந்த காணிக்கை எண்ணும் பணியில் ராஜபாளையம் சரக ஆய்வாளர் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்றனர்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம் மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக வழங்கும் பணம் மற்றும் நகைளை ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறந்து எண்ணப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பக்தர்கள் காணிக்கையை கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் 3 தற்காலிக உண்டியல் மற்றும் கோசாலை உண்டியல் 1 என மொத்தம் 15 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் மதுரை கூடலழகர் திருக்கோயில் உதவி ஆணை யரும் செயல் அலுவலருமான செல்வி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் வளர்மதி (பொறுப்பு) ஆகியோர் முன்னிலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப் பட்டன.
மேலும் கோவிலில் மண்டபத்தில் வைத்து உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ.86 லட்சத்து 37 ஆயிரத்து 70 ரொக்கமும் 225 கிராம் தங்கமும், 133 கிராம் வெள்ளியும் இருந்தது.
இந்த காணிக்கை எண்ணும் பணியில் ராஜபாளையம் சரக ஆய்வாளர் மகளிர் சுய உதவி குழுவினர் பக்தர் சேவா சங்க உறுப்பின்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.