ரூ.8.70 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள்
- ராஜபாளையம் அருகே செட்டியர்பட்டியில் ரூ.8.70 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.
- 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.
ராஜபாளையம்
ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் குறிப்பிட்டிருப்பதாவது:-
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எனது முயற்சியால் அசையா மணி விலக்கு மேற்குப்பகுதி யில் புதியதாக போர்வெல் அமைக்கப்பட்டதையும் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் சாஸ்தா கோவில் அணை பகுதிக்கு வந்து கொண்டி ருக்கும் குறைந்த அளவு நீர்வரத்தை முறையாக செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சேறுவராயன் கண்மாய்க்கு கொண்டு செல்லும் பணிகளை முடுக்கி விட்டுள்ளேன்.
நீர் செல்லும் வழிப் பாதையை சீரமைக்கப்பட்டு வருவதை அணையின் உள் பகுதிக்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆலோ சனைகள் வழங்கி உள்ளேன்.ஒரு வாரத்திற்குள் கண்மாய் நிரம்பியவுடன் தற்போது 2 வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வரும் குடிநீரை 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.
சேத்தூர் மற்றும் செட்டி யார்பட்டி பேரூராட்சி பகுதிகளுக்கு முறையாக குடிநீர் வழங்க முதலமைச்சர் திட்டத்தின்கீழ் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24 மணி நேர மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்பட உள்ளது.
செட்டியார்பட்டி பேரூ ராட்சியில் 2006-ம் ஆண்டு நான் துணை சேர்மனாக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி யால் செட்டியார்பட்டி பேரூ ராட்சிக்கு சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 2000 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது 3 மடங்காக குடிநீர் இணைப்பு உயர்ந்து 7000 குடிநீர் இணைப்பு உள்ளது. அதனால் தான் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.
இதனையும் சரி செய்யும் விதமாக செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு முறையாக குடிநீர் வழங்க 8.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதலாக சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கு விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். இப்பணியை ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இத்திட்டம் செயல் பாட்டிற்கு வரும்போது செட்டியார்பட்டி பேரூராட்சியில் தினந்தோறும் குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.