உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் பரிசு வழங்கினார்.

போதைப்பொருள் பயன்படுத்துவதால் வாழ்நாள் முழுவதும் பாழாகிறது-கலெக்டர் அறிவுரை

Published On 2023-10-13 06:59 GMT   |   Update On 2023-10-13 06:59 GMT
  • ெந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
  • நிகழ்ச்சியில் விருதுநகர் கலெக்டர் கலந்து கொண்டு அறிவுரை வழங்கினார்.

விருதுநகர்

விருதுநகர் செந்திகுமார நாடார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறையின் சார்பில், மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஓட்டுதல் மற்றும் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

போதை பழக்கம் நண்பர்கள் மூலமும், சூழ்நி லையின் காரணமாகவும் உருவாகிறது. சரியான விழிப்புணர்வு இருந்தி ருந்தால் போதைக்கு அடிமையாவதை தவிர்க்கலாம். மாணவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தும் மற்ற மாணவர்களிடமிருந்து வரும் பழக்கத்தை நிராகரிக்கும் போது எதிர்வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் சாலை விபத்தில் ஓர் ஆண்டில் சுமார் 15,000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. நமது மாவட்டத்தில் சுமார் 500 பேர் உயிரிழக்கின்றனர். அதுபோக கை, கால் இழப்பு மற்றும் பெருங்காயங்கள் ஏற்பட்டு பாதிப்ப டைவோரும் உள்ளனர். பெரும்பாலும் இந்த விபத்துக்கள் மது அருந்தி விட்டு வாகனம் இயக்குவதால் ஏற்படுகிறது.

போதையால் ஒரு நொடியில் ஏற்படக்கூடிய இன்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாழாகிவிடும். படிப்பு, வேலை உள்ளிட்டவைகளால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை கட்டுப்ப டுத்துவதற்கு போதைப் பொருள் தீர்வு அல்ல.

மாணவர்கள் தங்கள் இளமைகால பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி காலங்களில் விளை யாட்டாக ஆரம்பிக்கும் போதை பழக்க வழக்கம் எதிர்கால வாழ்க்கையை அழித்து விடும். அவற்றை தவிர்க்க நாம் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

போதைப் பொருள்கள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

Tags:    

Similar News