உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியபோது எடுத்த படம். அருகில் அவைத்தலைவர் எஸ்.ஆர். விஜயகுமரன், முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன், சிறுபான்மை பிரிவு மாநில நிர்வாகி ஜான்மகேந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு உண்டு

Published On 2023-11-07 07:57 GMT   |   Update On 2023-11-07 07:57 GMT
  • எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு உண்டு.
  • முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள மருது அய்யனார் கோவில் அரங்கில் விருதுநகர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் மா.பா.பாண்டியராஜன், கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். போட்ட விதை. அதனை ஜெயலலிதா உயிரோட்டமாக வளர்த்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை ஆலமரமாக்கி உள்ளார். நீங்கள் இங்கே வந்து இளைப்பாறலாம். அ.தி.மு.க. பூத் கமிட்டியினர் முறையாக செயல்பட்டால் வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றவுடன் எடப்பாடி பழனிசாமி பிரதமர் யார்? என்பதை சுட்டிக்காட்டுவார். அவரே பிரதமராகும் வாய்ப்பு உண்டு. எனவே பூத் கமிட்டியினர் தீவிரமாக செயல்பட வேண்டும். பட்டாசு தொழிலை தி.மு.க. அழிக்க முயற்சிக்கிறது. பண்டிகையை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் பட்டாசு கடை வைக்க அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் கலாநிதி, நகரச் செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், மச்சராஜா,விருதுநகர் மாவட்ட ஜெ.பேரவை துணைத்தலைவர் சரவணக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News