- சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியாளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றிய கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஒ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஊராட்சி ஊழியர்களுக்கு 2022 அக்டோபர் முதல் 2023 ஏப்ரல் வரை 7 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
மேலும் பொங்கல் பண்டிகை தொகையான ரூ.1000-மும் வழங்காமல் திருச்சுழி ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து பணியா ளர்களை ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் பொங்கல் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டும், மனுக்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் இல்லை.
இந்த நிலையில் நேற்று திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஊழியர்கள் திடீரென்று முற்றுகையிட்டு ேபாராட்டம் நடத்தினர். கலெக்டர் மற்றும் யூனியன் அலுவலக உயரதிகாரிகள் திருச்சுழி ஊராட்சி நிர்வா கத்தில் தலையிட்டு ஊராட்சி நிர்வா கத்தில் சுமூகமான சூழ்நிலையை உருவாக்கி இனிவரும் காலங்க ளில் ஊராட்சி ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென ஊராட்சி ஊழியர்கள் அடங்கிய ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மார்க்கண்டன், செல்வராஜ், விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் பெருமாள், மாற்றுத் திறனாளிகள் சங்க ஒன்றிய தலைவர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.