15 ஆண்டுகளாகியும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக முடியவில்லை-நகராட்சி கூட்டத்தில் தகவல்
- விருதுநகரில் 15 ஆண்டுகளாகியும் பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக முடியவில்லை.
- சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
விருதுநகர்
விருதுநகர் நகராட்சி கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, கமிஷனர் லீனாசைமன், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினார்.
அப்போது விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத் திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்பட வில்லை. தற்போது பல இடங்களில் சாக்கடை நிரம்பி கழிவுகள் வெளியேறுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதற்கு கமிஷனர் லீனாசைமன் பதிலளித்து பேசுகையில், விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு 12 ஆயிரம் வீடுகளுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை வீடு களுக்கு இணைப்பு கொடுக்க வேண்டுமென்ற தகவல்கள் இல்லை. பெரும்பாலானோர் டெபாசிட் தொகை செலுத்தவில்லை. ஆனாலும் அவர்களுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுமையாக முடியவில்லை. அண்மை யில் விருதுநகரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுதி மொழிக்குழு மார்ச் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதற்கான நட டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
கவுன்சிலர் ராமச்சந்திரன் பேசுகையில், எனது வார்டில் 73 வீட்டின் உரிமைதாரர்கள் டெபாசிட் தொகை கட்டி உள்ளனர். ஆனால் தற்போது வரை பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவில்லை. எனவே டெபாசிட் பணத்தை திருப்பி தரவேண்டும் என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. 15 ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் தற்போது வரை முடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.