சிறுமிக்கு கட்டாய திருமணம்; கணவர்-உறவினர் உள்பட 4 பேர் மீது வழக்கு
- சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்த கணவர்-உறவினர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரியம்மாள் புகார் செய்தார்.
விருதுநகர்
விருதுநகரை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. பெற்றோர் இறந்து விட்டதால் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 30-ந்தேதி சிறுமிக்கு சாத்தூர் சுப்பி ரமணியபுரம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவ ருக்கு சிறுமியை, அவரது சித்தி மாரீஸ்வரி என்பவர் அந்த பகுதியில் உள்ள கோவிலில் கட்டாய திருமணம் செய்து வைத் துள்ளார்.
அதன் பிறகு சிறுமியின் எதிர்ப்பையும் மீறி முருகன் அவரை கட்டாயப்படுத்தி பலமுறை உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் முருகனின் பெற்றோர் சிறுமியை தகாத வார்த்தை களால் திட்டி கொடுமைப் படுத்தியதாக கூறப்படு கிறது. இதையடுத்து சிறுமி உதவி மையத்தை தொடர்பு கொண்டார். அவர்களது ஏற்பாட்டில் சிறுமி குழந்தை காப்பகத்தில் சேர்க்கப் பட்டார். மேலும் இதுகுறித்து சின்ன காமன்பட்டி சமூக நலத் துறை மகளிர் ஊர்நல அலுவலர் மாரியம்மாளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் காப்பகத்திற்கு சென்று சிறுமியிடம் விசா ரித்தார். அப்போது தனக்கு நேர்ந்த துயரம் குறித்து சிறுமி அவரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாரி யம்மாள் புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியின் கணவர் முருகன், சித்தி மாரீஸ்வரி, கணவரின் தந்தை பெருமாள், தாய் சரோஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.