இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
- விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் உள்ள கருங்குளத்தில் கரைக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.
பழைய பஸ்நிலையம், காந்தி சிலை ரவுண்டானா வழியாக ஊர்வலம் சென்றது. ஊர்வலத்தின் தொடக்கமாக இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, நகர தலைவர் சஞ்சீவி, துணைத்தலைவர் முத்துமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஆர்.எஸ். எஸ். விஷ்வ இந்து பரிஷத், பா.ஜ.க. நிர்வாகிகளும் பங்கேற்ற பொதுக்கூட்டம் பஞ்சு மார்க்கெட்டில் நடந்தது.
அதை தொடர்ந்து ஊர்வலம் நடந்தது. விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோகர், கூடுதல் கண்காணிப்பாளர் சூரியமுத்து, ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரீத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன், சாத்தூர் டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் உள்ள கருங்குளத்தில் கரைக்கப்பட்டது.