முற்கால பாண்டியர் காலத்து விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு
- முற்கால பாண்டியர் காலத்து விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
- இவற்றை பாது காத்து அதன் வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ளது எழுவணி கிராமம். இங்கு பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதாக பாண்டியநாடு பண்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் செல்ல பாண்டியன், தாமரை கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் அங்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், முற்கால பாண்டிய மன்னர்கள் வீரத்திலும், பக்தியிலும், கலைகளிலும் சிறந்து விளங்கினர். இதற்கு உதாரணமாக தற்போது அதிகளவில் கிடைத்துக் கொண்டிருக்கும் முற்கால பாண்டியரின் சிற்பங்களும், கல்வெட்டுகளும் அதற்கு சான்றாக உள்ளன.
ஒவ்வொரு ஊரிலும் முற்கால பாண்டியர்கள் சிவனுக்கும், பெருமா ளுக்கும் தனித்தனியே கோவில்கள் அமைத்து அதிகளவில் நிவந்தங்கள் கொடுத்தும், இறையிலி நிலங்கள் கொடுத்துள்ளனர்.மக்களும் கோவில்களை பாதுகாத்து வந்தனர்.
மேலும் அதிக எண்ணிக் கையிலான கோவில்கள் கால ஓட்டத்தில் சிதைந்து காணாமல் போய்விட்டன.இருப்பினும் தற்போது அதிகளவில் சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. இதன் மூலமாக நாம் முற்கால பாண்டியர்களின் கலை பாணியை அறிய முடிகிறது.
தற்போது கிடைத்துள்ள விநாயகர் சிற்பமானது 3½ அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டு துதிக்கையானது இடது புறமாக வளைந்த நிலையில் மோதகத்தை பற்றியவாறு காட்சியளிக்கிறது.மேலும் 4 கரங்களுடன் விநாயகரின் வலது மேல் கரத்தில் மழுவும், இடது மேல் கரத்தில் பாசமும், வலது கீழ் கரத்தில் உடைந்த தந்தமும், இடது கரத்தை ஊரு ஹஸ்தமாக இடது தொடையில் வைத்தவாறும் ராஜ நீலாசனத்தில் அமர்ந்த வாறு காணப்படுகிறது. ராஜ லீலாசனம் என்பது இடது காலை நன்றாக மடக்கியும் வலது காலை செங்குத்தான நிலையில் வைத்திருக்கும் அமைப்பாகும்.
முற்கால பாண்டி யர்களின் கோவில்கள் காணாமல் போயிருந்தாலும் அவர்கள் காலத்து சிற்பங்க ளும், கல்வெட்டுகளும் அதி களவில் கிடைத்து வரு கின்றன. இவற்றை பாது காத்து அதன் வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.