- ஸ்ரீவில்லிபுத்தூரில் இருதய நோய் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இருதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையும், கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியும் இணைந்து "உலக இருதய தினத்தை" முன்னிட்டு இருதய நோய் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவன துணைத்தலைவர் சசி ஆனந்த் தலைமை தாங்கினார். டீன் சேவியர் செல்வ சுரேஷ் , கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர்.
ராஜபாளையம் சாய் இருதய மருத்துவமனையின் தலைமை இருதய நோய் நிபுணர் ராஜாராம் தலைமை விருந்தினராகவும், கிருஷ்ணன்கோவில் காவல்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன் கவுரவ விருந்தினராகவும் கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தம் முதல் குன்னூர் ஆரம்ப சுகாதார மையம் வரை பேரணி நடந்தது. இருதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவ-மாணவிகள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்தன் செய்திருந்தார்.