உள்ளூர் செய்திகள்

முடுக்கன்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சமத்துவபுரத்தில் சீரமைப்பு பணி

Published On 2022-06-19 08:27 GMT   |   Update On 2022-06-19 08:27 GMT
  • கல்குறிச்சி சமத்துவபுரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
  • இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.

காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி ஊராட்சி யில் உள்ள சமத்துவபுரத்தில் வீடுகள், பள்ளிகள், கழிப்பறைகள், நுழைவு வாயில் உள்ளிட்டவைகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைதொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுபட்டி ஊராட்சியில் ரூ.1.84 லட்சம் மதிப்பில் மறுசீரமைத்து புதுப்பிக்கப்பட்ட நூலகத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.1.15 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணியையும், கம்பிக்குடி ஊராட்சியில் ரூ.4.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை யை(நர்சரி)யும், வினோபா நகரில் பிரதான் மந்திரி ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் பார்வை யிட்டார்.

சத்திரபுளியங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7.68 லட்சம் மதிப்பில் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளையும், முடுக்கன்குளம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும், சூரனூர் ஊராட்சி, உவர்குளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையினையும், உவர்குளம் கண்மாயில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.55 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நீர்உறிஞ்சி குழிகளையும் கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு இந்த பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் கருப்பையா, உதவி பொறி யாளர்கள் சுப்பையா, காஞ்சனாதேவி, காரியா பட்டி ஊராட்சி ஒன்றியகுழு துணைத்தலைவர் ராஜேந்தி ரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க தமிழ்வாணன், பிரமுகர் கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News