பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை- கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்
- பால் உற்பத்தியாளர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் ஊக்கத்தொகை வழங்கினார்.
- காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ஆர்56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பால் உற்பத்தி யாளர்களுக்கு 2022-2023ம் ஆண்டு நான்காம் ஆண்டு காலாண்டுக்கான ஆதர வாளர்களுக்கு ஊக்கத் தொகை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.90 வீதம் 579 பால் உற்பத்தியாளர்களுக்கு முதன்முறையாக வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்56-ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த பால் உற்பத்தியாளர்கள் ராம் கணேஷ் (49,392), சிவக்குமார் (21,103), வெங்கடசாமி(11,846) ஆகியோருக்கு ஊக்கத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் குமார், ஆர்56-ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயல் அலுவலர், இணை பதிவாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முதல் 3 இடங்களை பிடித்த 3 நபர்கள் போக மீதமுள்ள 576 பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆர்-56 ராஜபாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க வரலாற்றிலேயே உற்பத்தியாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக முதன்முறையாக ஊக்கத்தொகை வழங்கியிருப்பது சங்கத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல உதவும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.