- கபடி போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
- தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டி ஊர்க்காவல் படை மைதானத்தில் நடந்தது. இறுதிப் போட்டியில் மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியும், வத்திராயிருப்பு வீ.கே.ஏ.என். அணியும் மோதியது. இதில் மீனாட்சிபுரம் அணி வெற்றி பெற்றது. வத்திராயிருப்பு அணிக்கு 2-வது பரிசு கிடைத்தது. கிருஷ்ணாபுரம் கே.எஸ்.சி. அணிக்கு 3-வது பரிசும், சோலைசேரி ஜாம்பவான் கபடி குழு அணிக்கு 4-வது பரிசும் கிடைத்தன. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கே.எஸ்.ஆர். பஸ் அதிபர் ஜெகதீஷ் சவுந்தர் பரிசுகளை வழங்கினார். சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். ராமராஜ், ராதாகிருஷ்ண ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி குழு தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனி முத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். தேசிய நடுவர் காளிதாஸ் வீரர்களுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.