உள்ளூர் செய்திகள்

எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

எழுத்தறிவு திட்டம் தொடக்கம்

Published On 2022-06-24 08:16 GMT   |   Update On 2022-06-24 08:16 GMT
  • 749 மையங்களில் 30 ஆயிரம் பேருக்கு எழுத்தறிவு திட்டம் தொடக்கம் தொடங்கியது.
  • தியாகராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 3-ம் கட்டமாக 749 மையங்களில் 29 ஆயிரத்து 991 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கற்றுத்தரும் பணி தொடங்கியுள்ளது என ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் கூறி னார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், தியாக ராசா தொடக்கப் பள்ளியில் உள்ள மையத்தில் திட்ட தொடக்க விழா வட்டாரக் கல்வி அலுவலர் மலர்கொடி தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் பழனிச்சாமி வரவேற்றார்.

திட்டத்தைத் தொடங்கி வைத்து, கற்போருக்கு புத்தகங்கள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை வழங்கி உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசியதாவது:-

விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ங்களை முன்னுரிமை பெறும் மாவட்டங்கள் என 2019-ம் ஆண்டு அறிவித்து ஒவ்வொரு துறையிலும் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை அரசு நிறை வேற்றி வருகிறது.

இதன்படி சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் சார்பில் முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் 2019-2020 ஆண்டில் 615 மையங்களில் தலா 40 பேருக்கும், 2020-2021 ஆண்டில் 1124 மையங்களில் தலா 40 பேருக்கும் அடிப்படை எழுத்தறிவு 6 மாதங்கள் தன்னார்வலர்கள் மூலம் இரவு நேரங்களில் கற்றுத் தரப்பட்டு, இவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்கப்ப ட்டது.

தற்போது 3-வது இறுதி கட்ட எழுத்தறிவுத் திட்டம் ஜூன் மாதம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் 749 மையங்களில் தொடங்க ப்பட்டுள்ளது. இதில் 29,991 பேருக்கு எழுத்தறிவு 6 மாதங்கள் கற்றுத்தரப்பட்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும். இத் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் எழுத படிக்கத் தெரியாதவர்கள் இல்லை என்ற நிலை உரு வாகும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

நிகழ்ச்சியில் ஆசிரியப் பயிற்றுநர் கற்பகம், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News